ஆபிஸுக்குள்ளே அரசு அதிகாரி மட்டை.. வீடியோ எடுத்த நியூஸ் ரிப்போர்ட்டருடன் கதவை பூட்டி குழந்தை போல விளையாட்டு.. தரையில் தவழ்ந்து உருண்ட காட்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், வேளாண்மை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், மது போதையில் உதவி இயக்குநர், தரையில் படுத்து உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பணிபுரியும் 2 பெண் அலுவலர்கள் உள்பட 7 அலுவலர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். செய்தியாளர்கள் அங்கு சென்றபோது, உதவி இயக்குநர் அறிவழகன், தட்டுத்தடுமாறி எழுந்து, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அலுவலக பணியாளர் ஒருவர், அவரை இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
Next Story