"உசுரே போனாலும் நிறுத்த மாட்டோம்"..730வது நாளாகியும் அசராத மக்கள் -தமிழகத்தில் இப்படியொரு போராட்டமா?

x

"உசுரே போனாலும் நிறுத்த மாட்டோம்"..730வது நாளாகியும் அசராத மக்கள் - தமிழகத்தில் இப்படியொரு போராட்டமா?

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 730-வது நாளை தாண்டியது.காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரை சுற்றியுள்ள வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய விமான நிலையமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான பல்வேறு கட்ட பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.இந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிட்டு, விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும் கிராம மக்கள் சோர்வடையாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகளை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயத்தையும், விவசாயிகளை காத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர்.இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்கள் என திரளான மக்கள் ஒன்று கூடி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்