ஏர்போர்ட் பணிகள் "தமிழகர்களே இல்லாத நிலை..?" வெளியான ஷாக் நியூஸ்
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுவதற்கு தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக உள்ளதாக ஏர் டிராபிக் கண்ட்ரோல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், 1932ல் தொடங்கப்பட்ட, ஏர் டிராபிக் கண்ட்ரோல், 91 ஆண்டுகளாகி நூற்றாண்டை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஏர் டிராபிக் கண்ட்ரோல் தொடங்கப்பட்ட அக்டோபர் 20 ஆம் தேதியை உலக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள், மருத்துவ ஏர் ஆம்புலன்ஸ் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணித்து, முறைப்படுத்தி ஒழுங்கு படுத்துவது சாவாலான பணி என்று ஏர் டிராபிக் கண்ட்ரோல் அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள, விமான கட்டுப்பாட்டு அறைகளில், அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழக மாணவர்கள் பலர் இப்பணிக்கு விண்ணப்பிப்பது கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.