போலீசை தாக்கிய அதிமுக நிர்வாகி.. கடையை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்.. சென்னையில் நடக்கும் பயங்கரம்
சென்னையை அடுத்த உள்ளகரத்தில் வசிக்கும் அதிமுக நிர்வாகி தனசேகரன், மது போதையில் இருச்சகர வாகனத்தில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அருகில் மளிகை கடை வைத்திருக்கும் சக்திவேல் என்பவர், அவரை தூக்கிவிட்டு உதவி செய்து அனுப்பி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த தனசேகரன், தனது செல்போனைக் காணவில்லை என்று கூறி, சக்திவேலிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தனசேகரனின் உறவினர்கள் சக்திவேலின் மளிகைக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்து சென்ற பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் விமல் உள்ளிட்டோரை அதிமுக நிர்வாகி தனசேகரனும், அவருடைய மகன் ஹிரீஷும் சட்டையைப் பிடித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரி சக்திவேல் தந்த புகாரின் பேரில், தனசேகரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். தப்பி யோடிய தனசேகரனின் மகன் ஹரிஷை தேடி வருகின்றனர்