அதிமுக முன்னாள் கவுன்சிலர் படுகொலை - தஞ்சையில் பயங்கரம்
தஞ்சாவூர் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலரை மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் பிரபு. இவர் திருக்காட்டுப்பள்ளி 5 ஆவது வார்டின் முன்னாள் அதிமுக கவுன்சிலரான நிலையில், இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளராகவும் இருந்து வந்தார். திருக்காட்டுப்பள்ளி அருகே பழமாநேரி சாலையில் உள்ள கடை ஒன்றில் இரவு 10 மணியளவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பிரபுவை, மர்மகும்பல் திடீரென சுத்துப்போட்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரபுவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story