ஐயப்ப பக்தர்களை பார்த்ததும் குறைந்த விலை களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை
தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து குளித்து விட்டு சபரிமலை சென்று வருகின்றனர்... அவர்கள் குற்றாலத்தில் சிப்ஸ், பேரீச்சம்பழங்களை வாங்கிச் செல்லும் நிலையில், பேரீச்சம்பழங்கள் அனைத்தும் தரம் குறைந்த மினரல் ஆயில் என்ற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியனுக்குத் தகவல் வந்துள்ளது... அவர் குற்றாலத்தில் பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டார்... 3 கடைகளில் நடைபெற்ற சோதனையில் தரம் குறைந்த, ரசாயன கலவையுடன் கூடிய சுமார் 1 டன் எடையுள்ள பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன... அவை பழைய குற்றாலம் சாலையில் உள்ள குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன... குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்கள் தரமான பேரிச்சம் பழங்களை வாங்கி செல்ல வேண்டும் என்றும், குறைந்த விலைக்கு விற்பனையாவதை வாங்கி செல்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்...