மின் கட்டணம் உயர்வு... தமிழக முழுவதும் வெடிக்கும் ஆர்ப்பாட்டம் | ADMK

x

மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

24 மணி நேரமும் மின்சாரத்தை கொடுத்துவிட்டு பின்னர் மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என்று அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக அரசை கண்டித்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலை தடுக்க கோரி கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள், லாரியில் ஏறி முழக்கமிட்டனர். மேலும் மின் கட்டண உயர்வால் அடித்தட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்களை திமுக அரசு நிறுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், டெல்லியை குறை கூறும் திமுகவினர், அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் மின் கட்டணத்தை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

மூன்று ஆண்டுகளாக விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், ஒரு வேலையும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மின்கட்டண உயர்வால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்