கட்சி நிர்வாகியிடமே ரூபாய் 1 கோடிக்கு மேல் கைவரிசையை காட்டிய -அதிமுக மாவட்டச் செயலாளர்

x

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு பணம் பெற்று ஏமாற்றியதாக புகாரளித்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்