வெடித்த புது சர்ச்சை... அதிமுக தொண்டர்கள் அடித்த போஸ்டரால்.. தென் மாவட்டத்தில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது சசிகலா, சசிகலா முதல்வர் ஆக பதவியேற்பதை தடுத்தது ஓபிஎஸ்தான்... சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கினால்தான் கட்சியில் இணைய முடியும் என சொன்னதும் ஓபிஎஸ்தான் என்ற தகவல்கள் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது. ஜாதிரீதியாக சசிகலா செயல்பட தொடங்கியுள்ளதாக விமர்சிக்கப்படும் சூழலில், தென்மாவட்ட மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனக் போஸ்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மாறி மாறி ஒட்டப்படும் போஸ்டர்களால் சிவகங்கையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்