அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. கடலூரில் பெரும் பரபரப்பு
விருத்தாசலம் அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராமுவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்கிற கோகுலுக்கும் ஏற்கெனவே நிலப்பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே ராமுவை பார்த்த சந்துரு தகாத வார்த்தைகளால் திட்டி, கை, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்து அலறி துடித்த ராமுவை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சந்துருவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story