அனல் பறக்கும் அக்கினி சட்டிகள்.. ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ஆடி வெள்ளி | Adi Friday | Thanthitv

x

மதுரையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து திருநங்கைகள் அக்கினி சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். மதுரை மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள அங்கம்மாள் கோவிலில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் இருந்து அக்கினி சட்டி ஏந்தி வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திருநங்கைகள் அலகு குத்தியும், எலுமிச்சம் பழத்தை உடம்பில் குத்தி அலங்கரித்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அதன்பின் நடனம் ஆடியவாறு அக்கினி சட்டி ஏந்தி அங்கம்மாள் கோவில் வரை ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்