அதானி கனவு திட்டம்.. இலங்கையில் வெடிக்கும் போராட்டம் | Adani
இலங்கையில் அதானி நிறுவனத்தின் காற்றாலை அமைக்க மன்னார் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்கான நிலங்களை அளவீடு செய்ய அதிகாரிகள் சென்ற போது அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பணிகளை தடுத்து நிறுத்தினர். மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் கனிம வள அகழ்வு நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள் போராடி வரும் நிலையில் தற்போது பேசாலை பகுதியில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story