பைக் ரன்னிங்கில் பெண்ணுக்கு பயங்கரம்.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான ரஞ்சித் | Actor Ranjith

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மயங்கி விழுந்து பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், அவரை நடிகர் ரஞ்சித் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணியும் அவரது மனைவி சித்ராவும் நூல் மில்லில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் பின்னால் அமர்ந்திருந்த சித்ரா திடீரென மயங்கி வண்டியில் இருந்து சரிந்து விழுந்துள்ளார்... அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இதை அவ்வழியே சென்ற நடிகர் ரஞ்சித் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்... உடனடியாக காரை நிறுத்திய ரஞ்சித் மயங்கிய பெண்ணுக்குத் தண்ணீர் கொடுத்து பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்... இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்