கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி.. சிறைத்துறை போட்ட அதிரடி உத்தரவு

x

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதி.. சிறைத்துறை போட்ட அதிரடி உத்தரவு

பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் இரண்டு சிறைத்துறை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

ஏற்கனவே ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..

தர்ஷனுக்கு சிகரெட் மற்றும் நாற்காலி, மேஜைகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனி மூன்று எஃப் ஐ ஆர் பதிவு....

பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர், மற்றும் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நடவடிக்கை

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதா எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியான புகைப்படங்கள் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் இன்று பிற்பகல் பரப்பனாக சிறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்