சென்னை NH-ல் கோர விபத்து.. காவு வாங்கப்பட்ட 3 நண்பர்கள்.. சீரியஸான நிலைமையில் 2 மாணவர்கள்

x

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரியை அடுத்துள்ள கோனேரிப்பள்ளி கிராமத்தில் சென்றபோது, லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் 5 இளைஞர்கள் பயணம் செய்த நிலையில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரது சடலங்களையும் மீட்ட போலீசார், படுகாயமடைந்த மற்ற இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூரை சேர்ந்த சந்தோஷ் குமார், நரேம் யஸ்வந்த், சேலம் தாரமங்கலத்தை சேர்ந்த தமிழன்பன் ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த மேட்டூரை சேர்ந்த சஸ்வின், திருச்சி கருமலை பகுதியை சேர்ந்த சர்வின் ஐசக் ஆகியோர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்