வீட்டில் ஏசி வெடித்து உயிர் பலி.. யாருக்குமே தெரியாமல் நடந்த சோகம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். 60 வயதான காமராஜ் தன் மனைவியை பிரிந்து பேரனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றிருந்த பேரன் வினோத், இரவு 11:30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது காமராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியான வினோத் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அறையில் எட்டி பார்த்த போது காமராஜ் உடல்கருகி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த காமராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். காமராஜ் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஏசி வெடித்து, அவர் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலிலும் தீப்பிடித்துள்ளது. இதில் காமராஜின் மீது தீ பரவி, உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்