போலீஸ் போல் நடித்து ரூ.3.5 லட்சம் அபேஸ்...பைக்கை வழிமறித்து வழிப்பறி..சென்னையில் பயங்கரம்
சென்னையில் போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன அதிகாரியிடம் மூன்றரை லட்சம் ரூபாய் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வரும் பிரபாகர்ராவ் என்பவர் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் என எழுதப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருவர் பிரபாகர்ராவ்வை வழிமறித்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story