"கலாமை குடியரசுத் தலைவர் ஆக்குவதற்கு ஜெயலலிதா ஒப்பு கொள்ளவில்லை.." - பரபரப்பை கிளப்பிய EX ஆளுநர்

x

"கலாமை குடியரசுத் தலைவர் ஆக்குவதற்கு ஜெயலலிதா ஒப்பு கொள்ளவில்லை.." - பரபரப்பை கிளப்பிய EX தமிழக ஆளுநர்

ஜெயலலிதாவிற்கு தான் அழுத்தம் கொடுத்ததாலேயே அப்துல் கலாம் குடியரசுத்தலைவர் ஆனார் என, தமிழக முன்னாள் ஆளுநர் ராம்மோகன்ராவ் பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் ஆளுநராக இருந்தவர் ராம்மோகன்ராவ். இவர் எழுதிய "Governorpet To Governor's House A Hick's Odysse" என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முன்னாள் ஆளுநர் ராம் மோகன்ராவ், அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக, பரிந்துரை செய்தது நான் தான் என குறிப்பிட்டுள்ளார். அப்துகலாமை குடியரசுத்தலைவராக்க முதலில் ஜெயலலிதா ஒப்புக் கொள்ளவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் கூட கிருணகாந்தை குடியரசுத்தலைவராக்க முடிவு செய்தார். ஆனால், என் தொடர் முயற்சியின் காரணமாகவும், அழுத்தத்தின் காரணமாகவும் அப்துல் கலாம் குடியரசுத்தலைவர் ஆனார் என ராம்மோகன் ராவ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை தன் புத்தகத்திலும் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்