வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் பொருட்கள்? - அமைச்சர் பகிர்ந்த விஷயம்

x

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். பால் தர ஆய்வு கூடம், பால் உற்பத்தி கூடம், குளிரூட்டும் அறை, ஆவின் நெய், பால்கோவா தயாரிக்கும் இடம் ஆகியவற்றை மனோ தங்கராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பால்கோவாவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்