ஆவின் பச்சை நிற பால் - அன்புமணி வைத்த கோரிக்கை | Aavin milk | anbumani ramadoss

x

ஆவின் பச்சை நிற பால் - அன்புமணி வைத்த கோரிக்கை

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நான்கரை சதவீத கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக மூன்றரை சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்