நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்..காவிரி அன்னைக்கு சீர்வரிசை..

x

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களைகட்டியது.

மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்ட படித்துறையில் திரண்ட பெண்கள், புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடினார்கள். பின்னர் படித்துறையில் மங்கல பொருட்கள் வைத்து காவிரி அன்னையை வழிபட்டனர். பின்னர் மேளதாளம் முழங்க ஊர்வல எடுத்துவரப்பட்ட சீர்வரிசையை காவிரி அன்னைக்கு வழங்கினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. தலை வாழை இலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தேங்காய், பழங்கள், காதோலை கருகமணி வைத்து தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். சில பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து வந்து காவிரி ஆற்றில் கரைத்தனர். கரூர் மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் திரண்ட பெண்கள், புது பச்சரிசி, அச்சு வெல்லம், காதோலை கருகமணி, பூ, பழங்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், எச்சரிக்கையை மீறி நடுக்காவிரியில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்