தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கிடந்த இளம் பிஞ்சு..விசாரணையில் வெளிவந்த பெரும் அதிர்ச்சி..
திருமயம் அருகேயுள்ள கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு வைரிவயல் கிராமத்தை சேர்ந்த செண்பகவல்லி என்பவருடன் திருமணமாகியுள்ளது. தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், அக்குழந்தை வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தையான மோகனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததும், அதில் குழந்தையும் பிறந்திருப்பது தெரியவர, முதல் மனைவியை சந்தேகத்தின் பெயரில் அவர் துன்புறுத்தியதால் இருவரும் பிரிந்ததும் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன