குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை - "எப்புட்றா.." - ஷாக்கான நீதிமன்றம்
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில், அவருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாகவும், ஆனால் முறையாக குடும்ப கட்டுப்பாடு செய்யாததால் மீண்டும் கருத்தரித்து குழந்தை பிறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெண்ணின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்....
Next Story