திடீரென இடிந்து விழுந்த சுவர்... உடல் நசுங்கி பலியான காவலாளி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
தாம்பரம் அருகே கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில், காவலாளி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ராகவேந்திரா சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இங்கு சோமசுந்தரம் என்பவர் காவலாளியாக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததில், இரண்டாம் தளத்தில் இருந்த கைப்பிடி சுவர் இடிந்து சோமசுந்தரம் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story