காதலி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
ஆண்டியூர் காவிரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் திருப்பதி, ஜேசிபி ஆபரேட்டர் வேலை செய்து வந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, நல்லாகவுண்டனூரைச் சேர்ந்த கந்தன் என்பவரின் மகளான சுதா என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், சுதா 2 மாதங்களுக்கு முன்பு, திருப்பதியின் விருப்பதுக்கு மாறாக, திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த திருப்பதி, பூச்சி மருந்து குடித்து சாலையோரம் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிந்தார். சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.