யாராலும் செய்ய முடியாத சர்ஜரி.. கொஞ்சம் பிசகினாலும் உயிரே போகலாம் - சாதித்து காட்டிய டாக்டர்கள்..!

x

தஞ்சை மருத்துவக்கல்லூரியில், பெண் ஒருவருக்கு இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஆபத்தான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் பெரும் தமனி என்ற மிக முக்கியமான ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. 5 லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை பெற முடியாத‌தால், 8 ஆண்டுகளாக மாத்திரை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். அவருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வெற்றிகரமாக சிகிச்சை முடிந்த‌தாக தெரிவித்துள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், அந்த பெண் நலமுடன் இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்