கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே எடுத்த திடீர் முடிவு - அதிர்ந்த போலீஸ் - பின்னணியில் பகீர் காரணம்

x

அடியாட்களுடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பறித்து, நிலத்தை சேதப்படுத்தி மிரட்டும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாமியார் உள்பட 3 பேர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள், அவரது மகன் சரபோஜி, அவரது மனைவி செந்தமிழ் செல்வி ஆகிய 3 பேரும் நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவல்துறையினர் ஓடி சென்று அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து,தண்ணீர் ஊற்றினர். விசாரணையில், மற்றொரு மகனின் மனைவி, அடியாட்களுடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பறித்து, நிலத்தை சேதப்படுத்தி மிரட்டுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்