திடீரென வந்த அறிவிப்பு..! ஆம்னி பேருந்து சங்கம் பரபரப்பு புகார் | Omni Bus

x

கடந்த 24-ம் தேதி ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், சென்னை எழிலக வளாகத்தில் போக்குவரத்து ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். அதில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பால், பொதுமக்கள் பீதியடைந்ததாகவும், இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடாத வண்ணம், தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்