மனைவியை அழகாக்க வினோத "திருட்டு..!" - பெயரை நம்பி 4லட்சம் கொடுத்த நபர்.. "பகீர் சம்பவம்"

x

சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் மோசடி குறித்து புகார் ஒன்றை அளித்திருந்தது. அதில், நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோக்களை குடைபோன்ற அமைப்பில் பதிவு செய்வதற்காக, அதனை தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஆன்லைனில் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆர்டர் செய்த பொருட்கள் வராததால், அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது பார்சல் அனுப்பப்பட்டதாக கூறியுள்ளனர். எனினும் சந்தேகத்தின் பேரில், டெல்லியில் இருக்கும் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்றபோது, அது போலியான நிறுவனம் என தெரியவந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள், உத்தரபிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு உத்தரபிரதேசத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட சக்சேனா மற்றும் அவரது மனைவி விந்தி ஆகிய இருவரை கைது செய்தனர். மாடலிங் துறையில் இருக்கும் மனைவி விந்திக்கு, அழகுசாதனப் பொருட்கள் வாங்க பணம் இ்ல்லாததால், இந்த மோசடியில் ஈடுபடட்டதாக கணவர் வினய் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்