ஒற்றை 'பீடி'-க்காக தந்தையை வெட்டிக் கொன்ற கொடூர மகன் - கோவையை உலுக்கிய சம்பவம்

x

பீடி வாங்க காசு தரவில்லை என்று தந்தையை சரமாரியாக வெட்டிக்கொன்ற மகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 92 வயதான கோபால்சாமி வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். இவரது இளைய மகன் முருகேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் அரிவாள்மனையால் முருகேஷ் தந்தை கோபால்சாமியை சரமாரியாக வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில் கோபால்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் முருகேஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பீடி வாங்க காசு தரவில்லை என்பதால் தந்தையை கொலை செய்து விட்டதாக முருகேஷ் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்