மாணவருக்கு சிறுநீர் கலந்த குளிர்பானம்? - திருச்சியில் நடந்த கொடூரம்
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில், இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு, அவரது வகுப்புத் தோழர்கள் இருவர், குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. மறுநாள் நடந்ததை அறிந்த அந்த மாணவர், பதிவாளரிடம் வாய்மொழியாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 3 உதவி பேராசிரியர்கள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் அறிக்கை வரும் 18ம் சமர்ப்பிக்க உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரே திடீரென புகாரை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள் மிரட்டியதால் அந்த மாணவர் புகாரை திரும்பப் பெற்றாரா? அல்லது பொய்யான புகார் அளித்தாரா? என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என சட்டப்பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story