ஊருக்கே ஆபத்தாக அமைந்த மணல் திட்டு.. சட்டென களமிறங்கிய இளைஞர்கள்
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதி இளைஞர்கள், 100 மீட்டர் மணல் திட்டுக்களை அகற்றி, வெள்ள நீர் கடலில் கலக்கும்படி செய்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் சேர்ந்த மணல் திட்டுக்கள் காரணமாக, ஆற்று படுகையில் உள்ள கிராமங்களை சூழ்ந்த வெள்ள நீர் கடலில் சேராத நிலை நிலவியது. இதனையடுத்து, புன்னைக்காயல் பகுதியை சேர்ந்த 15 இளைஞர்கள் படகு மூலம் முகத்தூவார பகுதிக்கு சென்று, 100 மீட்டர் மணல் திட்டுக்களை அகற்றி, வெள்ள நீரை கடலில் சேரும்படி செய்தனர். இதனால் வெள்ளம் விரைந்து வடியும் என கருதப்படுகிறது.
Next Story