தூக்க கலக்கத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை

x

தூக்க கலக்கத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி-சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

வீட்டில் சாம்பார் செய்த சுகுணா, அதனை பாத்திரத்துடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வீட்டின் வெளியே சென்றுள்ளார்.

அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த ஒன்றரை வயதான, அவர்களது மகள் தேன்மொழி, நிலை தடுமாறி கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்துள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்