திடீரென பற்றி எரிந்த வீடு - கருகி போன ரூ.15 லட்சம்.. - கதறும் குடும்பம்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பத்திர எழுத்தாளரின் குடிசை வீடு தீ பிடித்து எரிந்ததால், வீட்டில் கட்டு கட்டாக இருந்த15 லட்ச ரூபாய் ரொக்க பணம் தீயில் கருகியது. செய்யூரில் பத்திர பதிவு எழுத்தாளராக வேலை செய்து வரும் பாளையர் மடம் தெருவைச் சேர்ந்த தியாகு, தனது அண்ணன் வீட்டு மாடியில் குடிசை அமைத்து குடும்பத்தோடு வசித்து வந்தார். அவர் தனது மனைவியோடு வெளியே சென்று இருந்தார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கூறியுள்ளனர். நேரில் வந்து பார்த்தபோது, வீடு முழுமையாக எரிந்து தீக்கரையாகி இருந்தது. தனி வீடு கட்டுவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 15 லட்ச ரூபாயும், 15 சவரன் நகையும் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்