திடீரென ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்... பீதியில் உறைந்த மக்கள்

x

கோவை அய்யாசாமி மலை அடிவார வனப்பகுதியில் இருந்து வெளி வந்த யானை கூட்டம் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்... தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் விரைந்து சென்று 3 குழுக்களாக யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த யானைகள் செல்லப்ப கவுண்டன் புதூர் பகுதி வழியாக சென்று அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்திருக்கின்றன. கூடுதலாக வனத்துறை குழுக்களை அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்... வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியே வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், இனி காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்