தமிழக எல்லைக்குள் புகுந்த யானைக் கூட்டம்... உள்ளே வரும் காட்சி
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சானமாவு பகுதியில் தஞ்சமடைந்த 50க்கும் மேற்ப்பட்ட காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.
யானை கூட்டங்கள் குட்டிகளுடன் கூட்டமாக உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையை கடந்து சென்றன... மேலும் அவை ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன... இதனால் சானமாவு கிராம மக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
Next Story