திடீரென பிரேக் பிடிக்காததால் ஒன்றோடு ஒன்றாக மோதிய அரசு பேருந்து..! அலறிய பயணிகள்! குமரியில் பரபரப்பு
தூத்துக்குடியில் தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, நடுரோட்டில் பழுதாகி நின்றது. திருச்செந்தூருக்கான அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்போது திடீரென பழுதான பேருந்து தூத்துக்குடி நீதிபதிகள் குடியிருப்பு அருகே நடுரோட்டில் நின்றது. இதனையடுத்து செய்வதறியாமல் பயணிகள் தவித்தனர். தொடர்ந்து, அவ்வழியாக வந்த வேறொரு அரசு பேருந்தில் பயணிகள் ஏற்றப்பட்டனர். எனினும் அந்த பேருந்து எல்லா இடங்களிலும் நிற்காது என்பதால் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பேருந்து பழுதாகி நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்
Next Story