குப்பையில் கிடந்த வைரக்கல் - மதிப்பு தெரியாமல் தூக்கி எறிந்த பெற்றோர்
மதுரையில் கால்வாயில் இருந்து இறந்த நிலையில் பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனை முன் உள்ள கால்வாயில், குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பார்த்த போது, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story