ரயில் பயணியை ரூமுக்குள் அழைத்து கை நீட்டிய பெண் டிக்கெட் பரிசோதகர் - சென்னையில் பெரும் பரபரப்பு
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காத பயணியை, பெண் டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதவர்களை சோதிக்கும் பணியில்,
துணைத்தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த வடமாநிலத்தவர்கள் சிலரிடம் பிளாட்பார்ம் டிக்கெட் குறித்து கேட்டு விரட்டிப்பிடித்தார். இதில் ஒருவர் டிக்கெட் எடுக்காததால், அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தார். அப்போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால், அவரை அக்ஷயா, கன்னத்தில் அறைந்தார். இது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே நிர்வாகம், துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா மற்றும் தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரிஜான் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
Next Story