"நோ நோ.." சொன்ன டாக்டரை வெறி பிடித்து அடித்த பெண் நோயாளி - அரசு மருத்துவமனையில் அடிதடி.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளியும், மருத்துவரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
வேலூர் அடுத்த சாத்துமதுரையை சேர்ந்த சுபா உடல் நலக் குறைவால் கடந்த 7 நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்... அவரைக் காண வந்த ஆண் உறவினர் ஒருவர் சுபாவின் படுக்கையில் அமர்ந்ததாக கூறி, முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால், அந்த உறவினரை வெளியேறக் கூறியுள்ளார்... இதனால் எழுந்த வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்... தடுக்க முயன்ற சுபாவை மருத்துவர் அரைந்ததாகக் கூறப்படுகிறது... கோபம் கொண்ட சுபாவும் மருத்துவரைத் தாக்கியுள்ளார்... சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்... அப்போது, மருத்துவரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்... தொடர்ந்து மருத்துவர் விஷால் அளித்த புகாரின் பேரில் சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்