கடன் வாங்கிய தந்தை... மகனை கடத்திய கும்பல்...- திருச்சியில் அதிர்ச்சி

x

திருச்சியில் கடன் வாங்கியவரின் மகனை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் புதுச்சேரியைச் சேர்ந்த சேகர் சரண் என்பவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுமார் 5 லட்ச ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், இந்தத் தொகையை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி, ஞானப்பிரகாசத்தின் மகன் எபினேசனை, சேகர் சரண் கடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கடத்தப்பட்ட நபரையும் மீட்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்