சீட்டு தொழிலில் வீழ்ந்த குடும்பம்.. பூச்சி மருந்து குடித்து விபரீத முடிவு - தருமபுரியில் பயங்கரம்

x

தருமபுரி அருகே, கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்த பூபதி என்பவர், தீபாவளி சீட்டு நடத்தி நஷ்டமடைந்ததால், சுமார் 25 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கவே, விரக்தி அடைந்த பூபதி, தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன், தருமபுரி மாவட்டம் தெல்லனஹள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பில் அமர்ந்து பூச்சி மருந்து குடித்துள்ளனர். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்