திருவிழாவில் இருதரப்பினரிடையே தகராறு..மாறி மாறி கொடூரமாக தாக்கி கொண்ட பயங்கரம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, கோயில் திருவிழா மற்றும் தண்ணீர் பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. துப்பாக்குடியில் நடைபெற்ற திருவிழாவின் போது ஒரு தரப்பினர் அவர்கள் சார்ந்த கொடிகளை ஏற்றியதால், மற்றொரு தரப்பினருடன் சிறு தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் மற்றொரு தரப்பை தண்ணீர் எடுக்கவிடாமல் சாலையில் கற்கள் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் எடுக்கவிடாதோரை மற்றொரு தரப்பு அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த வீடியோ வைரலானது. பாதிக்கப்பட்ட தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
Next Story