தனி ஒருவராக புரட்சி செய்யும் கோவை பெண்.. பிரதமர் வீட்டுக்கு பறக்கும் கடிதங்கள் | Modi | Kovai
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பட்டதாரிப் பெண் கிருத்திகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர், தமிழக மின் வாரிய அலுவலகத்தில் உதவி எழுத்தராக பணியாற்றி வருகிறார். படிக்கும் காலத்திலேயே சமூக சேவையில் அக்கறை கொண்ட கிருத்திகா, பொதுமக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதன்படி, டெல்லி பிரதமர் அலுவலக முகவரிக்கு மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை கடிதமாக நாள்தோறும் அனுப்ப தொடங்கினார். இதனை மொத்தமாக நகலாக கிருத்திகா அடுக்கி வைத்துள்ளார். குறிப்பாக எரிவாயு சிலிண்டர் பிரச்சனை, பெண்களுக்கு சம உரிமை கிடைக்க இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக கடிதம் எழுதிய நிலையில், தீர்வு காணப்பட்டுள்ளதாக கிருத்திகா தெரிவித்துள்ளார். தினந்தோறும் ஏதேனும் பொது கோரிக்கைகளை முன்வைத்து பிரதமருக்கு தபால்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கிருத்திகாவை, பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளன