விபத்தில் சிக்கி நொறுங்கிய கார்... திமுக கவுன்சிலர், 6 மாத குழந்தை பலி.. திருப்பூரில் கோரம்
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தனது மனைவி இந்துமதி மற்றும் 6 மாத பெண் குழந்தையுடன், திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் தனது நண்பர்களுடன் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததில், சந்தோஷ் குமார் கார் மீது மோதியது. இதில் சந்தோஷ் குமார் மற்றும் அவரது குழந்தை உயிரிழந்தனர். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story