ஜீப்பின் அடியில் இருசக்கர வாகனத்துடன் சிக்கிய சிறுவன்

x

நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கோபி என்ற இளைஞர் ஓட்டி வந்த ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பின் அடியில் சிறுவனும், இருசக்கர வாகனமும் சிக்கியது. அதனைப் பொருட்படுத்தாத ஜீப் ஓட்டுநர் கோபி, 3 கிலோ மீட்டர் தூரம் வரை சிறுவனையும், இருசக்கர வாகனத்தையும் இழுத்துச் சென்றார். இதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்த நிலையில், சிறுவன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தில், இருசக்கர வாகனத்தை 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஜீப் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்