“ஜவுளிக்கடையில் வெடிகுண்டு?“ - இறங்கிய போலீஸ்... உடனே வெளியேறிய வாடிக்கையாளர்

x

காஞ்சிபுரத்தில், பிரபல பட்டுச்சேலை விற்பனை கடை மற்றும் திமுக எம்.எல்.ஏ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, நடுத்தெரு பகுதியில் உள்ள பட்டுச்சேலை விற்பனை கடைக்கு விரைந்த போலீசார், வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். தொடர்ந்து, ரயில்வே சாலையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கேயும் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர், இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு இல்லை என்று சோதனையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்