ஒரு குடும்பத்தையே சோகமாக்கிய பிறந்த நாள் கேக் - கடலூரில் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே மனைவியின் பிறந்த நாளுக்கு பேக்கரியில் வாங்கிய கேக் கெட்டுவிட்டதாக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். கல்லூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ், ஆவட்டி கூட்டு ரோட்டில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கியுள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பேக்கரி உரிமையாளரிடம் கேட்டதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் பேக்கரி உரிமையாளருக்கும், சதீஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, ராமநத்தம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். திட்டக்குடி பகுதியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
Next Story