தாக்கி விட்டு தப்பிய 19 வயது இளைஞரை சுட்டு பிடித்த SI - ஓசூரில் பரபரப்பு
கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அருகே கடந்த மாதம் 31 ஆம் தேதி ஹேமந்த் என்பவர் படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகாஷ் என்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது, திடீரென காவலர் ஒருவரை சரமாரியாக தாக்கி, ஆகாஷ் தப்பிக்க முயன்றது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. உடனே, ஆனெக்கல் காவல் உதவி ஆய்வாளர் பிரதீப், கைதியின் முழங்காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த காவலர் மற்றும் கைதியை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story