பெற்றோருடன் செல்ல மறுத்த 17வயது சிறுமி..எடுத்த அதிர்ச்சி முடிவு.. விருதுநகரில் பயங்கரம்

x

விருதுநகரில் அரசு உதவி பெறும் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராஜபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் காதல் விவகாரத்தில் அவர் கோவையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, புகாரானது போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் சிறுமி அவரது குடும்பத்துடன் செல்ல மறுக்கவே, அரசு உதவிபெறும் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்